/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் திறக்காததால் டிரைவர், கண்டக்டர் அவதி பாதியில் இறக்கிவிட்டதால் பயணிகள் தவிப்பு
/
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் திறக்காததால் டிரைவர், கண்டக்டர் அவதி பாதியில் இறக்கிவிட்டதால் பயணிகள் தவிப்பு
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் திறக்காததால் டிரைவர், கண்டக்டர் அவதி பாதியில் இறக்கிவிட்டதால் பயணிகள் தவிப்பு
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் திறக்காததால் டிரைவர், கண்டக்டர் அவதி பாதியில் இறக்கிவிட்டதால் பயணிகள் தவிப்பு
ADDED : நவ 12, 2024 01:21 AM
நாமக்கல், நவ. 12-
நாமக்கல்லில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில், ஓட்டல்கள் திறக்காததால், டிரைவர், கண்டக்டர்களும், சேலம் சாலையிலேயே இறக்கி விட்டதால் பயணிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
நாமக்கல்லில், 60 ஆண்டுகளுக்கு மேல், நகரின் மையப்பகுதியில் ஒரே பஸ் ஸ்டாண்ட் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த பஸ் ஸ்டாண்டில் உள்ளூர், வெளியூர் மப்சல் பஸ்கள், டவுன் பஸ்கள், மினி பஸ்கள் உள்ளிட்ட பஸ்கள் வந்து சென்றன. இரவு, பகல் என, 24 மணி நேரமும் பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக காணப்படும். பஸ் ஸ்டாண்டிற்கு அருகிலேயே மருத்துவமனை, மருந்து கடை, ஓட்டல், லாட்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்ததால், உள்ளூர், வெளியூர் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மாநகராட்சியாக தரம் உயர்ந்ததால், நகரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவசரகால ஆம்புலன்ஸ் சேவையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நாமக்கல் - சேலம் புறவழிச்சாலை அருகே, முதலைப்பட்டியில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, கடந்த, 22ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், பஸ் போக்குவரத்து தொடங்கியது.
இதனால், சேலம், ஈரோடு, கரூர், மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லும் பஸ்கள், நகருக்குள் வந்து செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. நாமக்கல் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள், பழைய பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு பஸ்சில் சென்று, அங்கிருந்து மற்றொரு டவுன் பஸ்சில் ஏறி, புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து வெளியூர் செல்லும் நிலை உள்ளது. நாமக்கல் நகரை பொறுத்தவரை, இரவு, 8:00 மணி வரை மட்டுமே, 'ஷேர் ஆட்டோக்கள்' இயக்கப்படுகின்றன.
டவுன் பஸ் சேவையும், இரவு, 10:00 மணியுடன் முடிந்துவிடுகிறது. இதனால், இரவு, 10:00 மணிக்கு மேல் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல விரும்பும் பயணிகளும், அங்கிருந்து நகருக்குள் வரும் பயணிகளும் சென்றுவர வழியில்லால் மிகவும் திணறுகின்றனர். அவற்றை கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில் புதிய பஸ் ஸ்டாண்டிற்கும், பழைய பஸ் ஸ்டாண்டிற்கும் சென்று வரும் வகையில், கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டியது அவசியம்.
கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் செல்லும் பஸ்கள், வள்ளிபுரத்தில் நின்று செல்வதற்கு பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும். அங்கிருந்து பயணிகள் பஸ்சில் ஏறினால், ப.வேலுாரில் இருந்து சேலம் செல்லும் கட்டணம் வசூலிக்கின்றனர். அவற்றை மாவட்ட நிர்வாகம் ஒழுங்குப்படுத்த வேண்டும்.
நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், 51 கடைகள் மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு, அவற்றில், 30 கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. இரண்டு ஓட்டல்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் எடுத்தவர்கள் இன்னும் கடைகளை அமைக்கவில்லை. ஐந்து பெட்டிக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு ஓட்டல்கூட திறக்கவில்லை. அதன் காரணமாக, வெளியூர் பயணிகளும், பஸ் டிரைவர், கண்டக்டர்களும் சாப்பிட உணவு கிடைக்காமல் பசியுடன் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும், ஒரு சில பஸ் டிரைவர்கள் நேரம் போதாமல், புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல், சேலம் மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு, புறவழிச்சாலையில் சென்று விடுகின்றனர். அதனால், பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் நடந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்
பட்டனர்.