/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் வருவாய் கோட்டத்தில்20,000 பேருக்கு பட்டா வழங்கல்
/
நாமக்கல் வருவாய் கோட்டத்தில்20,000 பேருக்கு பட்டா வழங்கல்
நாமக்கல் வருவாய் கோட்டத்தில்20,000 பேருக்கு பட்டா வழங்கல்
நாமக்கல் வருவாய் கோட்டத்தில்20,000 பேருக்கு பட்டா வழங்கல்
ADDED : செப் 02, 2025 01:17 AM
நாமக்கல்:''நாமக்கல் வருவாய் கோட்டத்தில், 20,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில், நகர்ப்புற வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.பி.,யும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார், 179 பேருக்கு, 1.60 கோடி ரூபாய் மதிப்பில் பட்டாக்களை வழங்கி பேசியதாவது: தமிழகம் முழுவதும், ஐந்து லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் வருவாய் கோட்டத்தில், 20,000 பேருக்கு, பட்டா வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் நகராட்சி மற்றும் 8 டவுன் பஞ்.,கள் பயன்பெறும் வகையில், 854.37 கோடி ரூபாய் மதிப்பில், ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 179 பயனாளிகளுக்கு, 1.60 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மற்றும் இ--பட்டாக்கள் வழங்கப்பட்டன. துணை மேயர் பூபதி, டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., சாந்தி, தாசில்தார் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.