ADDED : டிச 06, 2025 06:45 AM

நாமக்கல்: மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்-பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வீரபத்திரன், வட்ட தலைவர் சுப்-பிரமணியன், நிர்வாகிகள் குழந்தைவேல், கருப்பண்ணன், நட-ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், 70 வயது நிறைவுற்ற ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்-டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.மத்திய அரசுக்கு இணையாக, 2016க்கு முன் ஓய்வு பெற்றவர்க-ளுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட துணைத்த-லைவர் சின்னுசாமி, கிளைச்செயலாளர் குழந்தைவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

