/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'லைப் சர்டிபிகேட்' சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம் செய்ததால் ஓய்வூதியர்கள் அவதி
/
'லைப் சர்டிபிகேட்' சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம் செய்ததால் ஓய்வூதியர்கள் அவதி
'லைப் சர்டிபிகேட்' சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம் செய்ததால் ஓய்வூதியர்கள் அவதி
'லைப் சர்டிபிகேட்' சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம் செய்ததால் ஓய்வூதியர்கள் அவதி
ADDED : மே 28, 2024 07:10 AM
ராசிபுரம் : 'லைப் சர்டிபிகேட்' சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டதால், ஓய்வூதியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில், பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 6 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வோரு ஆண்டும் தங்களது, 'லைப் சர்டிபிகேட்'டை கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இ-சேவை மையங்களில் ஆன்லைனில், 'லைப் சர்டிபிகேட்'டை சமர்ப்பிக்க வாய்ப்பிருந்தாலும், ஓய்வூதியதாரர்கள் நேரடியாகவே கருவூலத்திற்கு சென்று, 'லைப் சர்டிபிகேட்'டை சமர்ப்பிக்கின்றனர். கடந்தாண்டு வரை, ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் ஏப்., முதல் ஜூன் மாதத்திற்குள் அவர்களது 'லைப் சர்டிபிகேட்'டை சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்கப்படும். இந்த பழைய முறையை மாற்றி, தற்போது புது முறையை செயல்படுத்தியுள்ளனர். ஓய்வூதியதாரர் எந்த மாதம் ஓய்வு பெறுகிறாரோ அதே மாதத்தில் தான், 'லைப் சர்டிபிகேட்'டை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட மாதத்தில் சமர்ப்பிக்க தவறினால், கூடுதலாக ஒரு மாதம் வழங்கப்படும்.சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இதை பின்பற்ற வசதியாக இருக்கும். ஆனால், 70 வயதுக்கு மேல் உள்ள ஓய்வூதியதாரர்கள், ஏற்கனவே புதுப்பிக்கும் மாதத்தை மாற்றி ஓய்வு பெற்ற மாதத்தில் செய்ய வேண்டும். கடந்தாண்டு வரை அக்கம் பக்கத்தில் உள்ள வயதான ஓய்வூதியர்கள் ஒரே சமயத்தில் தாலுகா அளவில் உள்ள கருவூலத்திற்கு சென்று புதுப்பித்து சென்றனர். தற்போது அவரவர் ஓய்வு பெற்ற மாதம் என்பதால், சிரமம் ஏற்படும்.
குறிப்பிட்ட மாதத்தில், 'லைப் சர்டிபிகேட்' சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியம் நிறுத்தம் செய்யும் அபாயம் உள்ளது. இந்த புதிய முறையால் ஓய்வூதியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் கருவூலத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. முன்பு, குறிப்பிட்ட, 3 மாதங்கள் மட்டுமே, 'லைப் சர்டிபிகேட்' சரிபார்க்கும் பணி இருக்கும். ஆனால், புதிய முறையால் ஆண்டு முழுதும் இப்பணி தொடரும் என வருத்தம் அடைந்துள்ளனர்.ராசிபுரம் கருவூலத்தில் தினந்தோறும், 10க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் புதியமுறை குறித்து சந்தேகம் கேட்டு வருகின்றனர். இதனால், அவர்களின் நன்மைக்காக தற்போது கருவூலம் முன், 'லைப் சர்டிபிகேட்' சமர்ப்பிக்க வேண்டிய முறை குறித்து பெரிய பேனர் வைத்துள்ளனர்.