/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதல்வர் திறந்து வைத்த சமுதாய கூடம் காட்சி பொருளானதால் மக்கள் அதிருப்தி
/
முதல்வர் திறந்து வைத்த சமுதாய கூடம் காட்சி பொருளானதால் மக்கள் அதிருப்தி
முதல்வர் திறந்து வைத்த சமுதாய கூடம் காட்சி பொருளானதால் மக்கள் அதிருப்தி
முதல்வர் திறந்து வைத்த சமுதாய கூடம் காட்சி பொருளானதால் மக்கள் அதிருப்தி
ADDED : ஆக 11, 2025 06:09 AM
மோகனுார்: நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 2.80 கோடியில் கட்டப்பட்டு, தமிழக முதல்வரால் திறந்து வைக்-கப்பட்டு, 5 மாதங்களாக பயன்பாட்டுக்கு கொண்-டுவராத சமுதாய கூடம் வெறும் காட்சி பொரு-ளாக காணப்படுவதால், பொதுமக்கள் கடும் அதி-ருப்தி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், பிரசித்தி பெற்ற நாவலடியான் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு முழுவதும் கிடாவெட்டு நிகழ்ச்சி நடக்கி-றது. அதற்காக, குடிபாட்டு மக்கள், பொதுமக்கள் என பலரும் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து தங்கி, நிகழ்ச்சியை முடித்து செல்வது வழக்கம்.
இந்த திருமண மண்டபங்கள், குறைந்த பட்சம், 15,000 முதல், அதிக பட்சம், 20,000 ரூபாய் வரை வாடகை நிர்ணயம் செய்துள்ளது. 'அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் சமுதாய கூடம் கட்ட வேண்டும்' என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.
அதையடுத்து, தமிழக அரசு, 2021-22ல், நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மோகனுார் - காட்-டுப்புத்துார் சாலை நாவலடியான் கோவில் அருகில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 2021-22ல், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், கடந்த, மே மாதம், தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்ப-ரன்சில், சமுதாய கூடத்தை திறந்து வைத்தார்.
அதையடுத்து, சமுதாய கூடம் மக்கள் பயன்பாட்-டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்-டது. ஆனால், இதுவரை பயன்பாட்டுக்கு வராமல், வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. இது, பொதுமக்களை கடும் அதிர்ச்சியும், அதிருப்-தியையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் சிலர் கூறியதா-வது:
தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டும், இதுவரை சமுதாய கூடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர பஞ்., நிர்வாகம் எவ்வித நடவடிக்-கையும் எடுக்கவில்லை. மக்கள் குறைந்த கட்ட-ணத்தில், பயன்படுத்த எளிதாக அமையும்.
தற்போது, அதிக கட்டணம் செலுத்தி வெளியில் மண்டபத்தை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்-பட்டுள்ளனர். பஞ்., நிர்வாகம் உரிய கட்டணம் நிர்-ணயம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு-வர வேண்டும் அல்லது பொது ஏலம் விட்டு, அதன் மூலம், பஞ்., நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமு-தாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மோகனுார் டவுன் பஞ்., நிர்வாகம் உரிய நட-வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.