/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோசாலை மாடுகளுக்கு தீவனம் அளிக்க எதிர்ப்பு தாசில்தார் வாகனத்தை மக்கள் முற்றுகை
/
கோசாலை மாடுகளுக்கு தீவனம் அளிக்க எதிர்ப்பு தாசில்தார் வாகனத்தை மக்கள் முற்றுகை
கோசாலை மாடுகளுக்கு தீவனம் அளிக்க எதிர்ப்பு தாசில்தார் வாகனத்தை மக்கள் முற்றுகை
கோசாலை மாடுகளுக்கு தீவனம் அளிக்க எதிர்ப்பு தாசில்தார் வாகனத்தை மக்கள் முற்றுகை
ADDED : மே 18, 2025 05:17 AM
புதுச்சத்திரம்: கோசாலையில் பரா மரிக்கப்படும் மாடுகளுக்கு தீவனம் அளிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்-பட்டது. இதுகுறித்து விசாரிக்க வந்த நாமக்கல் தாசில்தார் வாக-னத்தை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கடந்தப்பட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் கடந்த, 14 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்தது. நீதிமன்றம் உள்-ளிட்ட பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின், மீண்டும் கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது. கோவிலை, அங்காளம்மன் அறக்கட்டளை சார்பில் பராமரித்து வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன், கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. அன்று, ஒரு தரப்பினர் வழிபட சென்றனர். அவர்கள் காணிக்கையாக பீரோ எடுத்து வந்துள்ளனர். மற்றொரு தரப்பினர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கோவில் மீண்டும் பூட்டப்பட்டது.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள கோ சாலையில் பரா-மரிக்கப்படும், ஐந்து மாடுகளுக்கு தீவனம் வழங்க கோவில் அறக்-கட்டளை சார்பில் கோவிலுக்குள் சென்றுள்ளனர். அப்போது, கோவிலுக்குள் செல்லக்கூடாது என, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினருக்கிடையே வாக்கு-வாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரையும், புதுச்சத்திரம் போலீசார் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
நாமக்கல் தாசில்தார் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் கோமதி உள்-ளிட்ட வருவாய்த்துறையினர், நேற்று பேச்சுவார்த்தையில் ஈடு-பட்டனர். அப்போது அதிகாரிகள், கோவில் நிர்வாகத்திடம் சாவியை கேட்டதால் ஆத்திரமடைந்த கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள், நாமக்கல் தாசில்தார் மோகன்ராஜ் வாகனத்தை முற்-றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்-ளனர்.