/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீடு கட்ட இடம் கேட்டு மா.திறனாளிகள் மனு
/
வீடு கட்ட இடம் கேட்டு மா.திறனாளிகள் மனு
ADDED : செப் 02, 2025 01:16 AM
நாமக்கல்:வீடு கட்ட இடம் கேட்டு, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தியிடம், நல்வாழ்வு பார்வையற்றோர் சங்கம் மற்றும் வாழ்வுரிமை பார்வையற்றோர் சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள, 45 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு இடம்கேட்டு, இதற்கு முன் மனு கொடுத்திருந்தோம். அதில், 20 பேருக்கு வீடு உள்ளது என, அந்தந்த கிராம அலுவலர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலருக்கு தெரிவித்துள்ளனர். தற்போது வசிக்கும் இடம், உடன்பிறந்த அண்ணன், தம்பி, தங்கைகளுக்கும் பங்கு உள்ளது. இதனால் பல சிரமங்களை மேற்கொண்டு வருகிறோம். எனவே, 45 பேருக்கு வீடு கட்ட இடம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.
* இதேபோல், ராசிபுரம், வி-நகர் பொதுமக்கள், 'ஏழை குடும்பத்தை சேர்ந்த, கூலி வேலை செய்துவரும் சிறுபான்மையினரான எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது. எனவே, எங்களுக்கு கருணை அடிப்படையில், ராசிபுரம் தாலுகா பகுதியில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடு அல்லது இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்' என, கலெக்டரிடம் மனு அளித்தனர்.