/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிரந்தர பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
/
நிரந்தர பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 25, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: 'சோழசிராமணி ஊராட்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள், கலெக்-டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சோழசிராமணி ஊராட்சி, சக்-திபாளையம் அருந்ததியர் காலனியில்,70 ஆண்டுகளாக, 45 குடும்-பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் தற்காலிக பட்டா கிடைத்தபோதும், நிரந்தர பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மூலம் எங்க-ளுக்கு நிரந்தர பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.