/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரம் வெட்டிய மரங்களுக்கு ஈடாக பெயரளவுக்கு மரக்கன்று நடல்
/
சாலையோரம் வெட்டிய மரங்களுக்கு ஈடாக பெயரளவுக்கு மரக்கன்று நடல்
சாலையோரம் வெட்டிய மரங்களுக்கு ஈடாக பெயரளவுக்கு மரக்கன்று நடல்
சாலையோரம் வெட்டிய மரங்களுக்கு ஈடாக பெயரளவுக்கு மரக்கன்று நடல்
ADDED : நவ 16, 2025 02:31 AM
ராசிபுரம்: சாலை விரிவாக்கத்தின்போது வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக நடப்படும் மரக்கன்றுகள் பெயரளவுக்கு மட்டுமே வைக்கப்பட்-டுள்ளது.
'சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அரசு திட்டப்பணிகளின் போது வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக, அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க வேண்டும்' என, உயர் நீதி-மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது, ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக, பத்து மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. சேலம்-நாமக்கல் சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும்போது நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு ஈடாக, சாலையோரம் இருந்த இடங்களில் மரக்கன்றுகளை வைத்து பரா-மரித்து வருகின்றனர். இதில் பல இடங்களில், மரங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. தற்போது, ராசிபுரம்-ஆண்டகளூர்-கேட்டில் இருந்து புதுச்சத்திரம் வரை உள்ள சாலையை ஒட்டி சர்வீஸ் சாலை போடும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியின்போது, ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்கள், பாலம் அமைக்கும்போது புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் என, அனைத்தையும் வெட்டி விட்டனர். இவைகளுக்கு ஈடாக, ராசி-புரம் புறவழிச்சாலையில் அணைப்பாளையம் செல்லும் வழியில், மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மரக்கன்றுகளை வைக்கும்போது குறைந்தபட்சம், 10 அடி துாரத்திற்காவது இடைவெளிவிட்டு வைக்க வேண்டும். ஆனால், ஐந்தடிக்கு குறைவான துாரத்தில் வைத்துள்ளனர்.
இதனால் மரங்கள் வளர்வது மிகவும் கடினம். இங்கு வைக்கப்-பட்டுள்ள மரங்களில் பாதிக்குமேல் மரக்கன்றுகள் இறந்து-விடும். எனவே, பெயரளவிற்கு மட்டுமே மரக்கன்றுகளை நட்டு கணக்கு காட்டுகின்றனர். சமூக அக்கறையுடன், அனைத்து மரங்களும் வளரும் வகையில் நட்டு வைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

