/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : செப் 18, 2025 02:03 AM
நாமக்கல் :பிரதமர் நரேந்திர மோடியின், 75வது பிறந்த நாள் விழா, நேற்று நாடு முழுவதும், பா.ஜ.,வினர் கொண்டாடினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்விலாஸ்பிரபு முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கட்சியினர் ரத்ததானம் வழங்கினர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் அடுத்த பாப்பிநாய்க்கன்பட்டியில், இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
மாவட்ட தலைவர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தர். விழாவில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நாமக்கல் நகர தலைவர் தினேஷ்குமார், பாஜ பிரமுகர் வேல்ராஜ், பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
மோகனுார் மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், ப.வேலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மோகனுார் மேற்கு ஒன்றிய தலைவர் ரேவதி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட துணைத்தலைவர் வடிவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொது செயலாளர்கள் சுபாஷ்,
தங்கவேல், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்