/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிராவல் மண் வெட்டிய பொக்லைன், லாரி பறிமுதல்
/
கிராவல் மண் வெட்டிய பொக்லைன், லாரி பறிமுதல்
ADDED : செப் 30, 2025 01:38 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பிட்-3 பகுதியில் உள்ள தரிசு அரசு புறம்போக்கு நிலத்தில், சட்டத்துக்கு விரோதமாக கிராவல் மண், கற்களை வெட்டி கடத்துவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உதவி புவியியலாளர் நாகராஜன், 40, நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தார்.
உடன் வருவாய் துறையினர், போலீசார் சென்றனர். அப்போது அங்கு மண் வெட்டிக்கொண்டிருந்தவர்கள், அதிகாரிகளை பார்த்ததும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்ட தப்பி ஓடினர். இதையடுத்து மண் வெட்ட பயன்படுத்திய பொக்லைன், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, ஆயில்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.