/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் விஷமுறிவு சிகிச்சை மையம் தேவை
/
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் விஷமுறிவு சிகிச்சை மையம் தேவை
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் விஷமுறிவு சிகிச்சை மையம் தேவை
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் விஷமுறிவு சிகிச்சை மையம் தேவை
ADDED : மே 02, 2025 01:43 AM
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையத்தில், சமயசங்கிலி, களியனுார், மோளகவுண்டம்பாளையம், வண்ணாம்பாறை, எலந்தகுட்டை உள்ளிட்ட பகுதிகள், பெரும்பாலும் கிராமப்புறத்தை உள்ளடங்கி உள்ளது. இப்பகுதியில் அதிகளவு வயல்வெளிகள் உள்ளன. இரவில், குடியிருப்பு பகுதிகளுக்குள் விஷபூச்சிகள் உலா வருகின்றன. பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் வருகின்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேபோல் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும் ஏராளமானோர்
வருகின்றனர்.
அவர்களும் மேல் சிகிச்சைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த சமயத்தில் சிலர் உயிரிழக்கும் சம்பவம் நடக்கிறது. உயிரிழப்பை தவிர்க்க, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் விஷமுறிவு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.