/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இரவு நேர திருட்டை தடுக்க ரோந்து பணியில் போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டுகோள்

ADDED : அக் 03, 2025 01:40 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் இரவு நேர திருட்டு, மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுக்க, இரவில் போலீசார் ரோந்து பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளிப்பாளையத்தில் ஆவாரங்காடு, காவிரி, தாஜ்நகர், ஆவத்திபாளையம் உள்ளிட்ட பல பகுதியில் கடந்த சில மாதங்களாக இரவில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, இரவில் குடியிருப்பு பகுதியில் கும்பல், கும்பலாக டூ வீலரில் சுற்றி வருகின்றனர். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்களால் திருட்டும் அதிகரித்து காணப்படுகிறது. இரவில் போலீசாரின் ரோந்து பணி தொய்வு நிலையில் உள்ளதால், மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 27ம் தேதி, பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., கார்ன் பகுதியல் உள்ள ஒரு வீட்டில் இரவில் மர்மநபர் ஒருவர் புகுந்து நகையை திருடி சென்றார். இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுவை வைத்து, நகையை திருடிய ஈரோட்டை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
எனவே இரவில் மர்மநபர்களின் நடமாட்டத்தையும், திருட்டையும் தடுக்க பள்ளிப்பாளையம் போலீசார் ரோந்து பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.