/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
செங்குந்தர் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2025 02:48 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லுாரி, மருந்தியல் கல்லுாரி, அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் செவிலியர் கல்லுாரிகள் சார்பில் பொங்கல் விழா, தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலை விழாவாக கொண்டாடப்பட்டது.
இதில், ரங்கோலி கோலப்போட்டி, கும்மியடித்தல், கோலாட்டம், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா, செங்குந்தர் கல்வி குழும தலைவர் ஜான்சன் நடராஜன் தலைமையில் நடந்தது. பொருளாளர் தனசேகரன் வரவேற்றார். தாளாளர் பாலதண்டபாணி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு, செங்குந்தர் பொறியியல் கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார், செங்குந்தர் மருந்தியல் கல்லுாரி முதல்வர் சுரேந்தர்குமார், செங்குந்தர் செவிலியர் கல்லுாரி முதல்வர் நீலாவதி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி, ஒவ்வொரு துறை சார்பில் பொங்கல் வைத்து மாணவ, மாணவியர் கொண்டாடினர். செங்குந்தர் மாணவர்களின் பைன் ஆர்ட்ஸ் கிளப் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.