/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்களிடம் நிதி மோசடி செய்தவர்களின் சொத்து 12ல் பொது ஏலம் மூலம் விற்பனை: கலெக்டர்
/
மக்களிடம் நிதி மோசடி செய்தவர்களின் சொத்து 12ல் பொது ஏலம் மூலம் விற்பனை: கலெக்டர்
மக்களிடம் நிதி மோசடி செய்தவர்களின் சொத்து 12ல் பொது ஏலம் மூலம் விற்பனை: கலெக்டர்
மக்களிடம் நிதி மோசடி செய்தவர்களின் சொத்து 12ல் பொது ஏலம் மூலம் விற்பனை: கலெக்டர்
ADDED : டிச 01, 2024 01:33 AM
மக்களிடம் நிதி மோசடி செய்தவர்களின் சொத்து
12ல் பொது ஏலம் மூலம் விற்பனை: கலெக்டர்
நாமக்கல், டிச. 1-
'பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துக்கள், வரும், 12ல், டி.ஆர்.ஓ., தலைமையில், பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் - மோகனுார் சாலையில், 'செல்லம் ஈமு பார்ம்ஸ்' மற்றும் 'வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்ந நிறுவனம், பொதுமக்களிடம் நிதி மோசடி செய்ததால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நாமக்கல், பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணை செய்யப்பட்டு, கோவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, நிறுவன உரிமையாளர்கள் சிவக்குமார், கனகம், பழனியம்மாள் ஆகியோரின் அசையா சொத்துகள் ஏலம் விடப்படுகிறது.
ப.வேலுார் தாலுகா, பிள்ளைகளத்துார் கிராமத்தில், தலா, 2,360 சதுரடி கொண்ட இரண்டு வீட்டுமனைகள், ராசிபுரம் தாலுகா, காட்டூர், காட்டுக்கொட்டாயில், 3,716 சதுரடி கொண்ட வீட்டுமனை என, மூன்று வீட்டு மனைகள், டி.ஆர்.ஓ., தலைமையில், வரும் டிச., 12 மாலை, 3:00 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
.நாமக்கல் கலெக்டர் அலுவலகம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனுார், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகம், நாமக்கல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் ஆகியவற்றில், ஏல நிபந்தனைகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விருப்பம் உள்ள அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏல தேதிக்கு முன், நாமக்கல், பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மூலம் சொத்துக்களை பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.