/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பால் விலை ரூ.15 உயர்த்தணும் தவறினால் போராட்டம் அறிவிப்பு
/
பால் விலை ரூ.15 உயர்த்தணும் தவறினால் போராட்டம் அறிவிப்பு
பால் விலை ரூ.15 உயர்த்தணும் தவறினால் போராட்டம் அறிவிப்பு
பால் விலை ரூ.15 உயர்த்தணும் தவறினால் போராட்டம் அறிவிப்பு
ADDED : செப் 30, 2025 01:07 AM
நாமக்கல், 'தமிழக அரசு, வரும் அக்., 22க்குள், பால் விலையை, ஒரு லிட்டருக்கு, 15 ரூபாய் உயர்த்தி அறிவிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என, பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, தமிழக அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம், கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் விலையை, வரும் அக்., 22க்கு முன், தற்போதைய விலையில் இருந்து, லிட்டர் ஒன்றுக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். அறிவிக்காவிட்டால், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் சப்ளை செய்யாமல் நிறுத்தி, மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மேலும், தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கும் வரை, கால்நடைகளுடன், தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.