/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆர்.எம்.எஸ்., ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஆர்.எம்.எஸ்., ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2024 01:45 AM
ஆர்.எம்.எஸ்., ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், செப். 20-
நாமக்கல்லில், அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதிய சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல், தலைமை தபால் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதன் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். இதில், எட்டாவது ஊதிய குழு அமைக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட, 18 மாத பஞ்சபடியை மீண்டும் வழங்க வேண்டும். கமுட்டேசன் காலத்தை, 12 ஆண்டாக குறைக்க வேண்டும். 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியமும், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை, மருத்துவ படியை, 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் கோபால், சுப்பிரமணியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.