/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ்சை வழிமறித்து 2வது நாளாக போராட்டம்
/
பஸ்சை வழிமறித்து 2வது நாளாக போராட்டம்
ADDED : ஆக 29, 2024 07:53 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பஸ் ஸ்டாப். இப்பகுதியில் அனைத்து அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என, கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். ஆனால், உத்தரவை மீறி சில பஸ்கள், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்று வந்தன. இந்நிலையில், மசக்காளிப்பட்டியை சேர்ந்த பரிமளா, நேற்று முன்தினம் மதியம் சேலத்தில் இருந்து நாமக்கலை நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது, ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் இறங்க டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு கண்டக்டர், பஸ் அங்கு நிற்காது என கூறியுள்ளார்.
இதையடுத்து, பரிமளாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அந்த வழியாக சென்ற பஸ்சை வழிமறித்து, 2வது நாளாக, நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வெண்ணந்துார் போலீசார், பஸ் நிற்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கிராம மக்கள் பஸ்சை விடுவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.