/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கல்
/
கொல்லிமலை மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கல்
ADDED : அக் 17, 2025 02:12 AM
சேந்தமங்கலம், கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி, தெம்பளம் பகுதி மக்களுக்கு நடிகர் பாலா, இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கினார்.
தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று, பட்டம் வென்ற நடிகர் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருகே அரியூர் நாடு ஊராட்சி, தெம்பளம் பகுதி மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்காக, புதிதாக ஆம்புலன்ஸ் வழங்கி சேவையை துவக்கி வைத்தார். தெம்பளம் பகுதியை சேர்ந்த டிரைவர் துரையிடம், ஆம்புலன்ஸை ஒப்படைத்து விட்டு, அப்பகுதி மக்களுக்கு கறி விருந்து வழங்கி, அவர்களுடன் உணவு
சாப்பிட்டார்.