/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழையால் சாய்ந்த மரக்கன்றுகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
மழையால் சாய்ந்த மரக்கன்றுகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மழையால் சாய்ந்த மரக்கன்றுகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மழையால் சாய்ந்த மரக்கன்றுகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஆக 13, 2025 07:16 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பகுதியில் பெய்த மழையால், சாலையோரம் சாய்ந்த மூங்கில் கூண்டுகளை சரி செய்து மரக்கன்றுகளை காப்பாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல்லில் இருந்து சேலத்திற்கு செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை, கடந்த, 15 ஆண்டுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டபோது சாலையோரத்தில் இருந்த, 100 ஆண்டு பழமைவாய்ந்த ஆயிரக்கணக்கான புளிய மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
அதை தொடர்ந்து, மரங்கள் வெட்டபட்ட இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையோரம் வேப்பன், புளி, புங்கன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் வைக்கப்பட்டன. இதேபோல், புதன்சந்தையில் இருந்து ஆண்டகலுார்கேட் வரை ஏராளமான மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பாக மூங்கில் குச்சியால் கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்த மூங்கில் கூண்டுகள், கடந்த ஒரு வாரமாக புதுச்சத்திரம் பகுதியில் பெய்த மழையால் சாய்ந்து, மரக்கன்றுகள் உடையும் நிலையில் உள்ளன. எனவே, சாய்ந்த மூங்கில் கூண்டுகளை சரி செய்து, மரக்கன்றுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.