ADDED : நவ 14, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
திருச்செங்கோடு:ராகு,
கேது பெயர்ச்சியையொட்டி, நேற்று மாலை, திருச்செங்கோடு கைலாசநாதர்
கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
நவகிரஹ சன்னதியில் உள்ள ராகு, கேது
பகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர்
உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு
அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு
பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
