/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கு மறு நினைவூட்டல் பயிற்சி முகாம்
/
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கு மறு நினைவூட்டல் பயிற்சி முகாம்
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கு மறு நினைவூட்டல் பயிற்சி முகாம்
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களுக்கு மறு நினைவூட்டல் பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 19, 2024 07:09 AM
நாமக்கல் : தமிழகத்தில், 1,300க்கும் மேற்பட்ட, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் என, 4,000க்கும் மேற்பட்டோர், இரவு, பகல் என, 'ஷிப்ட்' முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்கள் பணியில் சேரும்போது, சென்னை டி.எம்.எஸ்., தலைமை அலுவலகத்தில், முதலுதவி சிகிச்சை அளிப்பதை பற்றிய முழு பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர்.நாமக்கல்லில், 27 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதில், டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் என, 100க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தினமும் பல்வேறு வகையான நோயாளிகளை முதலுதவி சிகிச்சை அளித்து, பல உயிர்களை காத்து மக்களின் நம்பிக்கையை உறுதி செய்து வருகின்றனர். மேலும், இச்சேவை உயிர் காக்கும் சேவை என்பதால், '108' அவசரகால ஆம்புலன்சில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, நினைவூட்டல் பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன்படி, நாமக்கல்லில், ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர்களுக்கு, 'நினைவூட்டல் பயிற்சி முகாம்' நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி தலைமை வகித்தார். சென்னை தலைமை அலுவலக மனிதவளத்துறை அலுவலர் அனிதா பங்கேற்று பயிற்சியளித்தார்.இப்பயிற்சியில், விபத்தில் தலையில் அடிபட்ட நோயாளிகள், கை கால் முறிவு ஏற்பட்டவர்கள், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்கள், பிட்ஸ் நோய்கள், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து, செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.