ADDED : ஜூலை 23, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டார். கூட்டத்தில், தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்ட உயர்வை திரும்ப பெற வேண்டும். தொழில் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், இந்த கட்டண உயர்வு தொழில்களை கடுமையாக பாதிக்கும். அவற்றை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்.
நாமக்கல் மாநகரில் மின்தடை அறிவிப்பை முறையாகவும், சரியாகவும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் மல்லீஸ்வரன், துணைத்தலைவர் தர்மலிங்கம், இணைச்செயலாளர் ஹரி உள்பட பலர் பங்கேற்றனர்.