/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டு குடிநீர் திட்ட திறப்பு விழாவுக்கு மத்திய அமைச்சரை அழைக்க கோரிக்கை

ADDED : ஆக 10, 2025 12:52 AM
ராசிபுரம், காவிரி கூட்டு குடிநீர் திட்ட திறப்பு விழாவுக்கு, 'ஜல்சக்தி' துறையின் மத்திய அமைச்சரை அழைக்க வேண்டும் என, பா.ஜ., நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்.
பா.ஜ.,வின் மத்திய அரசு திட்டங்கள் பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
ராசிபுரம் சட்டசபைக்கு உட்பட்ட மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பட்டணம், ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட, எட்டு டவுன் பஞ்.,கள், ராசிபுரம் நகராட்சி மற்றும் ஒன்றியங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்கும் பணி முடியும் நிலையில் உள்ளது.
சோதனையோட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. 10 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். இதற்கான மொத்த மதிப்பீடான, 854.37 கோடி ரூபாயில், மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' திட்டம் மற்றும் 'அம்ருத்-2.0' திட்டத்தின் கீழ், 446 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்கு உள்ளதால், 'ஜல்சக்தி' துறையின் மத்திய அமைச்சர் சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.