/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.டி.ஓ., - துணை பி.டி.ஓ.,க்களுக்கு பணி முதுநிலை பட்டியல் வெளியிட கோரிக்கை
/
பி.டி.ஓ., - துணை பி.டி.ஓ.,க்களுக்கு பணி முதுநிலை பட்டியல் வெளியிட கோரிக்கை
பி.டி.ஓ., - துணை பி.டி.ஓ.,க்களுக்கு பணி முதுநிலை பட்டியல் வெளியிட கோரிக்கை
பி.டி.ஓ., - துணை பி.டி.ஓ.,க்களுக்கு பணி முதுநிலை பட்டியல் வெளியிட கோரிக்கை
ADDED : ஆக 10, 2025 01:31 AM
நாமக்கல், 'பி.டி.ஓ.,-துணை பி.டி.ஓ.,க் களுக்கு, பணி முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும்' என, மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. சங்க தலைவர் பாலவிநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் பாரதி வரவேற்றார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திர
பிரசாத், மாவட்ட செயலாளர் பிரபுசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் வீரகடம்புகோபு, கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலகில், தினமும் நடக்கும் மாவட்ட, வட்டார அளவிலான ஆய்வு கூட்டங்கள், இணையவழி ஆய்வு கூட்டங்கள் நடத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நிலுவையில் உள்ள பணிமாறுதல் விண்ணப்பங்கள், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்டகாலமாக மாவட்ட நிலை அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களை, பணி மாறுதல் செய்து சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் இளநிலை உதவியாளர் முதல், அனைத்து நிலை பணியாளர்களையும், அருகில் உள்ள வட்டாரங்களில்
பணிமாறுதல் செய்ய வேண்டும்.
பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்களுக்கு, பணி முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும். துணை பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும். காலியாக உள்ள துணை பி.டி.ஓ., மற்றும் உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.