/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறை போராட்டம் அனைத்து பணிகளும் முடக்கம்
/
வருவாய்த்துறை போராட்டம் அனைத்து பணிகளும் முடக்கம்
ADDED : அக் 16, 2024 01:15 AM
வருவாய்த்துறை போராட்டம்
அனைத்து பணிகளும் முடக்கம்
நாமக்கல், அக். 16-
ப.வேலுார் தாலுகா, நருவலுார் வி.ஏ.ஓ., ராமன். இவர் கடந்த, 4ல், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை, அப்பகுதியை சேர்ந்த விவசாயி திருமுருகன் அகற்றியது தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, வேலகவுண்டம்பட்டி போலீசில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட விவசாயி திருமுருகனை போலீசார் கைது செய்யவில்லை.
இச்செயலை கண்டித்து, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், பணிகளை புறக்கணித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் முதல் தொடர் கார்த்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய்த்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமிநரசிம்மன், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணகுமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். காத்திருப்பு போராட்டத்தால், நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன.