/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 06, 2025 12:55 AM
நாமக்கல், :தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார். பொருளாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில துணை தலைவர் குமரேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். கூட்டத்தில், அரசு மற்றும் வருவாய்த்துறை ஆணையரின் சுற்றறிக்கைப்படி, இடமாறுதல் அளிக்க வேண்டும்.
அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும். பணியிட மாறுதலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட இணை செயலாளர் தாமோதரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.