/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகள் ஆதார் பதிவு சிறப்பு முகாம்: 142 பேர் பயன்
/
குழந்தைகள் ஆதார் பதிவு சிறப்பு முகாம்: 142 பேர் பயன்
குழந்தைகள் ஆதார் பதிவு சிறப்பு முகாம்: 142 பேர் பயன்
குழந்தைகள் ஆதார் பதிவு சிறப்பு முகாம்: 142 பேர் பயன்
ADDED : ஜூலை 06, 2025 12:54 AM
மோகனுார், தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், குழந்தைக்கு ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாம், மோகனுார் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பஞ்., துவக்கப்பள்ளி அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் நடந்தது.
காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை நடந்த இம்முகாமில், மோகனுார் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், 142 பேர் பங்கேற்று, தங்கள் குழந்தைகளின் ஆதாரை பதிவு செய்தனர்.
மேலும், 'அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகள் நல மையத்தில், ஆதார் பதிவு செய்ய வேண்டி தகவல் தெரிவித்தால், அங்கு ஆதார் முகாம் நடத்தப்படும்' என, குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.