/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டியில் பெய்த கன மழையால்சாய்ந்த நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
/
எருமப்பட்டியில் பெய்த கன மழையால்சாய்ந்த நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
எருமப்பட்டியில் பெய்த கன மழையால்சாய்ந்த நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
எருமப்பட்டியில் பெய்த கன மழையால்சாய்ந்த நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை
ADDED : ஏப் 17, 2025 02:08 AM
எருமப்பட்டி:எருமப்பட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல் அருகே, துாசூரில், 250 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. கடந்த நவ.,ல் கொல்லிமலையில் பெய்த கன மழையால், இந்த ஏரி நிரம்பியது. இதனால், ஏரியின் கடைமடை விவசாயிகள், மார்கழி, தை மாத பட்டத்தில், 200 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் நடவு செய்தனர்.
மார்கழி பட்டத்தில் நடவு செய்த விவசாயிகள், அறுவடையை முடித்த நிலையில், தை மாதத்தில் நடவு செய்த விவசாயிகள், அறுவடைக்கு தயாராகி வந்தனர்.இந்நிலையில், கடந்த வாரத்தில் எருமப்பட்டி, முட்டாஞ்செட்டி, பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து, மூன்று நாட்களாக இரவில் மிக கன மழை பெய்தது. அப்போது வீசிய சூறாவளி காற்றால், துாசூர், பாலப்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் வயலில் சாய்ந்தன. இதனால், நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கோம்பையை சேர்ந்த விவசாயி மணி கூறியதாவது:எருமப்பட்டி பகுதியில் கடந்தாண்டு நல்ல மழை பெய்தது. இதனால், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் தை மாத பட்டமாக நெற்பயிர் நடவு செய்தனர். இந்த நெற்பயிர்கள், பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த வாரத்தில் சூறாவளியுடன் பெய்த மழையால், நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதை அரசு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.