/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை அமைக்கும் பணிஎம்.எல்.ஏ., பூமி பூஜை
/
சாலை அமைக்கும் பணிஎம்.எல்.ஏ., பூமி பூஜை
ADDED : டிச 19, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், டிச. 19--
கபிலர்மலை யூனியன், பாண்டமங்கலம், 12வது வார்டு சந்தை செல்லும் பாதையில் சாலை அமைக்க நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 6.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். பாண்டமங்கலம் டவுன் பஞ்., தலைவர் சோமசேகர் மற்றும் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,
பொதுமக்கள் பங்கேற்றனர்.

