/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 01:18 AM
நாமக்கல், காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் செங்கோடன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
அதில், மத்திய, மாநில அரசுகள் நிதியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 30 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். ஊராட்சியில் பணிபுரியும், ஓ.எச்.டி., ஆப்ரேட்டர்களுக்கு, துாய்மை காவலர்களுக்கு ஓய்வூதியம், சர்வீஸ் தொகை வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் துாய்மை பணியாளர்களுக்கு, 7வது ஊதியக்குழு ஊதியம் வழங்குவதுடன் நிலுவைத்தொகை அரியராக வழங்க வேண்டும். 2000 மே, 10க்கு பின் புதிய நியமனம் செய்யக்கூடாது என பிறப்பித்த தடையாணை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.பல்லாயிரக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.