நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்கன்று நடும் விழா
நாமகிரிப்பேட்டை, நவ. 16-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நேற்று தேசிய தொல்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''தொல்குடியினர் தினத்தையொட்டி, முள்ளுக்குறிச்சி அரசு ஆண்கள் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், இன்று முதல், 24 வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
இதில், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்ய உள்ளனர். எனவே, அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

