/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளி விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லுாரி திறப்பு பயணிகள் கூட்டத்தால் பஸ் ஸ்டாண்ட் திணறல்
/
தீபாவளி விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லுாரி திறப்பு பயணிகள் கூட்டத்தால் பஸ் ஸ்டாண்ட் திணறல்
தீபாவளி விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லுாரி திறப்பு பயணிகள் கூட்டத்தால் பஸ் ஸ்டாண்ட் திணறல்
தீபாவளி விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லுாரி திறப்பு பயணிகள் கூட்டத்தால் பஸ் ஸ்டாண்ட் திணறல்
ADDED : நவ 04, 2024 04:35 AM
நாமக்கல்: தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லுாரிகள் திறப்ப-தாலும், அலுவலர்கள் பணிக்கு திரும்புவதாலும் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் பயணிகள் கூட்டத்தால் திணறியது.
நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை, கடந்த, 31ல் கோலாகல-மாக கொண்டாடப்பட்டது. அதற்காக, பள்ளி, கல்லுாரி, அரசின் அனைத்து துறைகளுக்கும், தீபாவளி முதல், நான்கு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, தீபாவளிக்கு முதல் நாள், மதியம் முதல், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்-கப்பட்டது. அதன் காரணமாக, தீபாவளியையொட்டி, நான்கரை நாளாக விடுமுறை அதிகரித்தது.
இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து, இன்று பள்ளி, கல்-லுாரிகள் திறக்கிறது. அதேபோல், அரசு துறை அலுவலர்களும் பணிக்கு திரும்புகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடு-வதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு, தனியார் நிறுவன அலுவலர்கள் பணியாளர்கள், பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என பலரும், தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர்.
அதேபோல், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளிமா-வட்டங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், நேற்று மீண்டும் கல்வி நிறுவனத்திற்கும், அரசு அலுவலகத்திற்கும் திரும்பினர். அதற்காக, நாமக்கல் மாவட்டத்தில், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக, நாமக்கல் - திருச்சி, 20, நாமக்கல் - சேலம், 15, நாமக்கல் - ஈரோடு, 15 என, மொத்தம், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பள்ளி, கல்லுாரி திறக்கப்படுவதை அடுத்து, தாங்கள் செல்லும் இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்சில், ஏறி சென்றனர். அதனால், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டத்தால் திணறியது.
போலீசாரும் பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை தவிர்த்து, பயணம் செய்ய வழிவகை செய்தனர். நாமக்கல்லில் இருந்து சேலம், திருச்சி, கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு இயக்-கப்பட்ட பஸ்களில், கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ்சிற்குள் நின்று கொண்டும், படியில் தொங்கியபடியும் பயணிகள் சென்-றதை காணமுடிந்தது.