/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் சாயக்கழிவுநீர் ஊற்றெடுப்பதால் அதிர்ச்சி
/
கிணற்றில் சாயக்கழிவுநீர் ஊற்றெடுப்பதால் அதிர்ச்சி
ADDED : நவ 23, 2024 01:25 AM
கிணற்றில் சாயக்கழிவுநீர்
ஊற்றெடுப்பதால் அதிர்ச்சி
பள்ளிப்பாளையம், நவ. 23-
பள்ளிப்பாளையத்தில், இ.ஆர்., தியேட்டர், ராமசாமி தெரு, ஆர்.எஸ்., சாலை பகுதியில் ஏராளமான வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, 100க்கு மேற்பட்ட வீடுகளில் குழாயில் இருந்து சிவப்பு, ரோஸ், ஆரஞ்சு நிறத்தில் தண்ணீர் வந்தது. இதனால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில், சாயக்கழிவுநீரால் பாதிக்கப்பட்ட கிணற்று நீரை, நேற்று முன்தினம் காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை மோட்டார் வைத்து முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் துாய்மையான தண்ணீர் ஊற்றெடுக்கும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், மீண்டும் சாயக்கழிவுநீர் கலந்தே தண்ணீர் ஊற்றெடுத்ததால், செய்வதறியாது உள்ளனர்.