ADDED : நவ 01, 2026 05:59 AM
ராசிபுரம்:சேலம்
மாவட்டம், கொண்டலாம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்
செல்லான் மகன் செல்வகுமார், 45. இவருக்கு திருமணமாகி குழந்தைகள்
உள்ளனர். இவர், கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள வெள்ளி பட்டறையில்
வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், சிவக்குமார் நேற்று, ராசிபுரம்
அடுத்துள்ள அல்லேரி முனியப்பன் கோவிலுக்கு வந்துள்ளார். கோவிலுக்கு
வந்த தகவலை தன் குடும்பத்தினரிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், 'வாட்ஸாப்' வழியாக ஒரு தகவலையும் அனுப்பியுள்ளார். அதில்,
'நான் பூஜை முடிந்து வந்தாலும் வருவேன். இல்லை என்றால் வீட்டை நன்றாக
பார்த்துக்கொள்ளுங்கள்' என, உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதை
தொடர்ந்து, நேற்று இரவு, 7:30 மணிக்கு, அல்லேரி முனியப்பன் கோவில் வளாகம்
முன், சிவக்குமார், தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததில், அவர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராசிபுரம் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
