sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

6 சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பதிவு நிறைவு

/

6 சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பதிவு நிறைவு

6 சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பதிவு நிறைவு

6 சட்டசபை தொகுதியில் எஸ்.ஐ.ஆர்., பதிவு நிறைவு


ADDED : டிச 08, 2025 08:54 AM

Google News

ADDED : டிச 08, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஆறு சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில், 100 சதவீதம் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 21 ஆண்டுகளுக்கு பின், தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், இப்பணிக்காக, 1,629 பேர் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த, 4 முதல், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 6 சட்ட சபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவம் வினியோகிக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள் மூலம் திரும்ப பெறப்பட்டு வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில், 14 லட்சத்து, 66,660 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு, செயலி மூலம் பதிவேற்றம்

செய்யப்பட்டு வருகிறது. ராசிபுரம் தொகுதியில், 2 லட்சத்து, 35,828 படிவங்கள், சேந்தமங்கலத்தில், 2 லட்சத்து, 49,377, நாமக்கல்லில், 2 லட்சத்து, 64,052, ப.வேலுாரில், 2 லட்சத்து, 22,632, திருச்செங்கோட்டில், 2 லட்சத்து, 32,858, குமாரபாளையம் தொகுதியில், 2 லட்சத்து, 61,913 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இதனால், 100 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பு படிவங்கள், 100 சதவீதம் மின்னணு மயமாக்கப்பட்டு உள்ளதன் அடிப்படையில், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு என்ற அடிப்படையில், 1.90 லட்சம் வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான பட்டியல் சட்டசபை தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி முகவர்கள், 'வாட்ஸாப்' குரூப்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை வைத்து முகவரி மாறி சென்றவர்கள் குறித்த தகவல் தெரிந்தால், அவர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'இதற்கு, வரும், 11 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் கணக்கீட்டு படிவங்களை கொடுக்காத நபர்களின் பெயர், வரும், 16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது நீக்கம் செய்யப்படும்' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us