/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
/
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : டிச 23, 2024 09:15 AM
நாமக்கல்: மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் நடந்தது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நரசிம்மர் கோவில் எதிரில் ஒரே கல்லால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயருக்கு கோவில் அமைந்துள்ளது. தமிழ் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதன்படி மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துபடி செய்யப்பட்டது. இதையடுத்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வசதிக்காக மரப்பலகையால் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது நேற்று பக்தர்களின் எடை தாங்காமல் உடைந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக பலகையை அப்புறப்படுத்தினர்.