/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஆக 12, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் தாலுகா, ஆரியூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில், ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
முன்னதாக, மோகனுார் காவிரி ஆற்றிற்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, வேல், கத்தி, கரகம், சுத்தம் செய்து விசேஷ பூஜை நடத்தி, தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஆரியூர், மோகனுார், வெங்கைரை உளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

