/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டும், குழியுமான சாலையால் அவதி
/
குண்டும், குழியுமான சாலையால் அவதி
ADDED : அக் 31, 2025 12:45 AM
எலச்சிபாளையம்,  மேட்டுபாளையம் கிராமத்தில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எலச்சிபாளையம் யூனியன், உஞ்சனை கிராமம், மேட்டுபாளையம் முதல் எளையாம்பாளையம் வரை 3 கி.மீ., துாரம் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாக தினமும் ஏராளமான மாணவர்கள், தொழிலாளர்கள், இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்களில் சென்ற வண்ணம் உள்ளனர். அதுமட்டுமின்றி, இச்சாலை நாமக்கல் மெயின்ரோடு மற்றும் பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் உள்ளது.
பல ஆண்டுகளாக சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருப்பதால் மக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் ஆங்காங்கே சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. வேறுவழியின்றி, பல கி.மீ., தொலைவு சுற்றிக்கொண்டு பள்ளி மாணவர்கள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
மருத்துவமனை, பள்ளிக்கு செல்லும் அத்தியாவசிய சாலையாக உள்ளதால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

