/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அரவை பருவம் முடிந்தும் ஊக்கத்தொகை கிடைக்கல' தீபாவளி கொண்டாடாமல் கரும்பு விவசாயிகள் விரக்தி
/
'அரவை பருவம் முடிந்தும் ஊக்கத்தொகை கிடைக்கல' தீபாவளி கொண்டாடாமல் கரும்பு விவசாயிகள் விரக்தி
'அரவை பருவம் முடிந்தும் ஊக்கத்தொகை கிடைக்கல' தீபாவளி கொண்டாடாமல் கரும்பு விவசாயிகள் விரக்தி
'அரவை பருவம் முடிந்தும் ஊக்கத்தொகை கிடைக்கல' தீபாவளி கொண்டாடாமல் கரும்பு விவசாயிகள் விரக்தி
ADDED : நவ 02, 2024 04:33 AM
நாமக்கல்: ''அரவை பருவம் முடிந்தும் ஊக்கத்தொகை கிடைக்காததால், தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு கரும்பு விவசாயிகள் தள்ளப்பட்டனர். அதனால், காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்,'' என, இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் (சிபா), முன்னாள் தேசிய தலைவர் விருத்தகிரி கூறினார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:தமிழகத்தில், 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என, மொத்தம், 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசு, கரும்புக்கு டன் ஒன்றுக்கு நியாயமான ஆதாய விலை அறிவிக்கிறது. அதையடுத்து, மாநில அரசு பரிந்துரை விலையை சேர்த்து, கரும்பு விவசாயிகளுக்கு வழங்கி வந்தது. ஆனால், தமிழக அரசு பரிந்துரை விலையை, கடந்த, 2017 முதல் நிறுத்திவிட்டது. அதற்கு பதில், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதாவது, மத்திய அரசு அறிவிக்கும் நியாயமான ஆதாய விலை, சர்க்கரை கட்டுமானம், 10.25 சதவீதம் இருக்கும் கரும்புக்கு மட்டுமே. தமிழகத்தில், சர்க்கரை கட்டுமானம், 9.02 சதவீமாக உள்ளது. அதனால், அதற்கு பதில், ஊக்கத்தொகை வழங்குகிறது. அதன்படி, கடந்த, 7 ஆண்டுகளாக ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது.
கடந்த, 2023 அக்., 1 முதல், கடந்த செப்., 30 வரை, 2023-24ம் ஆண்டுக்கான அரவை பருவம் முடிந்துள்ளது. அதற்காக கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, கடந்த பிப்., நிதிநிலை அறிக்கையில், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்காக, 247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25ம் ஆண்டு அரவை பருவம், அக்., 1ல் துவங்கி உள்ளது. ஆனால், கரும்பு வினியோகம் செய்த விவசாயிகளுக்கு, இதுவரை, ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை.
தமிழகத்தில் கரும்பில் இருந்து சர்க்கரை, மொலாசஸில் இருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம், ஆண்டுதோறும், 40,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு, விவசாயிகளின் பங்கு முக்கியமானது. அரசு ஊழியர்கள், தீபாவளி கொண்டாட போனஸ் வழங்குகிறது. ஆனால், அரசுக்கு வருவாய் தரும் கரும்பு விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டாமா?
தற்போது, கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ள நிலையில், அரவை பருவம் என்பது, இரண்டு மூன்று மாதங்களில் முடிந்துவிடுகிறது. அவற்றை கணக்கெடுத்து அரசுக்கு வழங்கினாலே விரைவில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி விடலாம்.
ஆனால், உரிய நேரத்தில் ஆய்வு அறிக்கை அரசுக்கு சென்று சேராததால், ஊக்கத்தொகை வழங்கவில்லை. அதனால், இந்தாண்டு கரும்பு வினியோகம் செய்த விவசாயிகள், தீபாவளியை கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இனியும் காலம் தாழ்த்தாமல், அரசு அறிவித்த ஊக்கத்தொகையை, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.