/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எச்.ஐ.வி., தொற்று கண்டறியும் நம்பிக்கை மையம் இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம்: கலெக்டர்
/
எச்.ஐ.வி., தொற்று கண்டறியும் நம்பிக்கை மையம் இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம்: கலெக்டர்
எச்.ஐ.வி., தொற்று கண்டறியும் நம்பிக்கை மையம் இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம்: கலெக்டர்
எச்.ஐ.வி., தொற்று கண்டறியும் நம்பிக்கை மையம் இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம்: கலெக்டர்
ADDED : டிச 07, 2024 06:52 AM
நாமக்கல்: ''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், எச்.ஐ.வி., தொற்று உள்ள-வர்களை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்கள் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன,'' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, நாமக்கல் - மோகனுார் சாலை, பழைய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், விழிப்புணர்வு பேரணியை கொடி-யசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக,
அனைவரும் உறுதி-மொழி ஏற்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப-டுத்தும் வகையில், கையெழுத்து
இயக்கத்தை, எம்.பி., தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் உமா பேசியதாவது:இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், எச்.ஐ.வி., தொற்று உள்ள-வர்களை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்கள் மற்றும்
கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் (ஏ.ஆர்.டி., சென்டர்கள்) உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 3 ஆண்டுகளில்,
1,46,285 ஆண்க-ளுக்கு எச்.ஐ.வி., பரிசோதனை செய்ததில், 330 பேருக்கும்; 1,11,294 பெண்களுக்கு பரிசோதனை செய்ததில்,
269 பேருக்கும்; 265 மூன்றாம் பாலினத்தவருக்கு பரிசோதனை செய்ததில், 4 பேருக்கும், 73,851 கர்ப்பிணிகளுக்கு
பரிசோதனை செய்ததில், 24 பேருக்கும், எச்.ஐ.வி., தெற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சைக்கு
பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, திருச்செங்-கோடு, ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் இலவச
ஏ.ஆர்.டி., கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏ.ஆர்.டி., சிகிச்சை மையங்களில், தற்போது
வரை, 7,501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எச்.ஐ.வி., தொற்று பாதிக்கப்-பட்டு சிகிச்சை பெறும் நபர்களுக்கு
மாதந்தோறும், 1,000 ரூபாய்- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி,
மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, திட்ட அலுவலர் மாவட்ட
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு செல்வக்குமார் உள்ளிட்ட, அரசு, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள்
பங்-கேற்றனர்.