/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு
/
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : நவ 14, 2025 01:40 AM
ராசிபுரம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், ராசிபுரம் ஒன்றிய தேர்தல் ராசிபுரம் வி.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. தேர்தல் அலுவலராக நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் மோகன்குமார் செயல்பட்டார்.
ராசிபுரம் ஒன்றிய தலைவராக ஆரோக்கியமேரி, செயலாளராக லட்சுமி, பொருளாளராக உமாமகேஸ்வரி, கொள்கை விளக்க செயலாளராக அனந்த நாயகி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக விஜயலட்சுமி, ரேவதி, சரஸ்வதி, மகளிரணி அமைப்பாளராக தாமரை, இலக்கிய அணி அமைப்பாளராக சங்கீதா உள்ளிட்ட 35 பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின் நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார். மாவட்
ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருகசெல்வராசன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். -அரசு ஊழியர்களின், 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி வரும், 18ல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ள, ஒருநாள் அடையாள வேலை
நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

