sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்டத்தில் 2 கோவில்களில் திருப்பணி வீடியோ கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்

/

மாவட்டத்தில் 2 கோவில்களில் திருப்பணி வீடியோ கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்

மாவட்டத்தில் 2 கோவில்களில் திருப்பணி வீடியோ கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்

மாவட்டத்தில் 2 கோவில்களில் திருப்பணி வீடியோ கான்பரன்சில் முதல்வர் அடிக்கல்


ADDED : நவ 14, 2024 07:22 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் கட்டு-மான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை, வீடியோ கான்-பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் சேந்தமங்கலம் யூனியன், பேளுக்குறிச்சி பழனி-யாண்டவர் கோவில்களில், 3.45 கோடி ரூபாய் மதிப்பில் திருப்ப-ணிகளை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, பேளுக்குறிச்சி பழனியாண்டவர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் உமா கலந்துகொண்டார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலில், 2.10 கோடி ரூபாய் மதிப்பில், 3 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி மற்றும் கூவைமலை, பழனியாண்டவர் கோவிலில், 1.35 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுப்பிரகார கல் மண்டபம்

கட்டும் பணி என, மொத்தம், 3.45 கோடி ரூபாய் மதிப்பில், 2 புதிய திட்டப்பணிக-ளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். விரைவில் இப்ப-ணிகள் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அட்மா குழுத்தலைவர் அசோக்குமார், ஹிந்து சமய அறநிலையத்-துறை துணை கமிஷனர் நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்-டனர்.






      Dinamalar
      Follow us