/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் வரும் 10 முதல் பஸ்கள் இயக்கம் 5 இடங்களில் பயணியர் நிழற்குடை
/
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் வரும் 10 முதல் பஸ்கள் இயக்கம் 5 இடங்களில் பயணியர் நிழற்குடை
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் வரும் 10 முதல் பஸ்கள் இயக்கம் 5 இடங்களில் பயணியர் நிழற்குடை
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் வரும் 10 முதல் பஸ்கள் இயக்கம் 5 இடங்களில் பயணியர் நிழற்குடை
ADDED : நவ 07, 2024 12:59 AM
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் வரும் 10 முதல் பஸ்கள் இயக்கம்
5 இடங்களில் பயணியர் நிழற்குடை
நாமக்கல், நவ. 7-
''நாமக்கல் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்டில், வரும், 10 முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக, ஐந்து இடங்களில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்,'' என, கலெக்டர் உமா கூறினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து, வரும், 10 முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார். நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின், கடந்த, 22ல், நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார். இந்த பஸ் ஸ்டாண்ட் வரும், 10 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. அதனால், அனைத்து புறநகர் பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு முழுமையாக பொதுமக்களுக்கு சிரமமின்றி மாற்றப்பட வேண்டும். பஸ் ஸ்டாண்டில் விளம்பர காணொலி மூலம், பஸ்களின் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.பஸ்களின் நேர
விபரங்கள் திரையிட வேண்டும்.
விபத்தை தவிர்க்க, பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே தேவைக்கேற்ப வேகத்தடை அமைக்க வேண்டும். மக்கள் பயன்படும் வகையில், பஸ் நிறுத்தத்திற்காக அண்ணா சாலை, கோஸ்டல் சாலை, வள்ளிபுரம் சாலை ஆகிய இடங்களில், 5 பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று திரும்பும் அனைத்து நகர பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சென்று வர வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல, 10 நிமிடத்திற்கு ஒருமுறை என, அரசு, தனியார் பஸ்கள், 117 முறை தினசரி இயக்கப்படும். பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, நகர பஸ்சில், கட்டணம், 7 ரூபாய், புற நகர பஸ்சில், சாதாரண கட்டணம், 7 ரூபாய், விரைவு பஸ் கட்டணம், 10 ரூபாய் என நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து வரும் பஸ்கள், நாமக்கல் - -திருச்செங்கோடு சாலையிலிருந்து, சேலம் சாலை திரும்பி வந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். சேலத்தில் இருந்து வரும் பஸ்கள், நேரடியாக புதிய ஸ்டாண்ட் செல்ல வேண்டும். இதற்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி துணை மேயர் பூபதி, ஆர்.டி.ஓ., பார்த்திபன், செயற்பொறியாளர் சண்முகம், கூடுதல் எஸ்.பி., தன்ராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகுணா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
புகாரளிக்க இலவச எண்
பஸ் பயணத்தின் போது, மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை புகார் தெரிவிக்க, காலை, 9:30 முதல், மாலை, 5:30 மணி வரை, தங்களுடைய புகார்களை, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையின், 1800-599-7990 இலவச தொலைப்பேசி எண்ணிலும், கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையின், 1800-425-1997 எண்ணிலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.