/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் புதிய வகுப்பறை திறப்பது எப்போது?
/
மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் புதிய வகுப்பறை திறப்பது எப்போது?
மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் புதிய வகுப்பறை திறப்பது எப்போது?
மரத்தடியில் பாடம் படிக்கும் அவலம் புதிய வகுப்பறை திறப்பது எப்போது?
ADDED : ஜூலை 27, 2025 12:46 AM
எருமப்பட்டி போடிநாய்க்கன்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், புதிய வகுப்பறை கட்டுமான பணி முடிந்த நிலையிலும் பயன்பாட்டுக்கு திறக்காததால், மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, அலங்காநத்தம் பிரிவு, மணிக்கரடு, கரட்டுப்புதுார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 350 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 2009ல் நடுநிலைப்பள்ளியாக இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், 9, 10ம் வகுப்பில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆனால், தரம் உயர்த்தப்பட்டும் கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால், மரத்தடியில் பாடம் படித்து மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்தாண்டு போடிநாய்க்கன்பட்டி கந்துக்காரர் குட்டை அருகே, 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 10க்கும் மேற்பட்ட வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டது. பணிகள் முற்றிலும் முடிந்த நிலையில், மேலும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளதால், கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறையை அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர். இதனால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: போடிநாய்க்கன்பட்டி பள்ளி, சில ஆண்டுகளுக்கு முன் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. வகுப்பறை பற்றாக்குறையால், கடந்தாண்டு புதிதாக வகுப்பறைகள் கட்டப்பட்டும், பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இந்தாண்டு பள்ளி திறக்கப்பட்டபோதும் கூட புதிய கட்டடத்தை திறக்காததால், பழைய கட்டடத்தில் மரத்தடியில் அமர்ந்து வகுப்பை கவனிக்கும் அவலநிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

