/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அமாவாசையையொட்டி குண்டுமல்லி விலை கிடுகிடு
/
அமாவாசையையொட்டி குண்டுமல்லி விலை கிடுகிடு
ADDED : மே 26, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், நவல டிப்பட்டி உள்ளிட்ட பகுதி களில், குண்டு மல்லி சாகு படி அதிகளவில் நடக்கிறது. கடந்த வாரத்தில், தினமும் ஐந்து டன் வரை உற்பத்தி செய்யப்பட்டதால், குண்டு மல்லி பூக்கள் விலை குறைந்தது.
இதனால், பூக்களை பறித்து வெளி மாவட்ட ங்களுக்கு அனுப்பி வந்தனர்.இன்று அமாவாசையை யொட்டி, எருமப்பட்டி யூனி யனில் குண்டுமல்லி பூக்கள் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் வரை, ஒருகிலோ குண்டுமல்லி, 200 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், நேற்று விலை உயர்ந்து, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.