/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்குவாரி லாரிகளால் சேறும், சகதியுமான சாலை
/
கல்குவாரி லாரிகளால் சேறும், சகதியுமான சாலை
ADDED : மே 17, 2025 01:37 AM
மல்லசமுத்திரம் :மல்லசமுத்திரம் அருகே, தொட்டியப்பட்டி கிராமத்தில், ஓலப்பட்டி அருகே கல்குவாரி ஒன்று உள்ளது. இங்கு கற்கள் ஏற்றி செல்வதற்காக, தினமும், 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், அப்பகுதி சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக, இப்பகுதியில் வசிக்கும், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, வயதானவர்கள், பெண்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, வெயில் காலங்களில் சாலையில் புழுதி படர்ந்திருப்பதால் பலத்த காற்றடிக்கும்போது, புழுதி மண் குடியிருப்புகளுக்குள் புகுந்து குடியிருப்பை நாசம் செய்துவிடுகிறது. எனவே, சாலையை சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.