ADDED : மே 08, 2025 01:30 AM
நாமகிரிப்பேட்டை, மே 8
நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வாரத்தில், தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த ஏப்., 22ல் தேர் திருவிழாவுக்கான பூச்சாட்டுதல் நடந்தது. 26ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 24ல் கம்பம் நடும் விழா, பால்குட ஊர்வலம், சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று காலை, 11:00 மணிக்கு தீமிதி விழா தொடங்கியது.
முன்னதாக, கோவில் பூசாரிகள் கரகத்துடன் தீமிதித்தனர். தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 1,000க்கும் மேற்பட்டோர் தீமிதித்தனர். பெண் பக்தர்கள் அதிகளவு கலந்து கொண்டனர். தீமிதித்த பக்தர்களுக்கு லட்டு, கூழ், தயிர்சாதம், மோர் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி
நடந்தது. இதில் அமைச்சர் மதிவேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, விழாக்குழு தலைவர் அன்பழகன், டி.எஸ்.பி., விஜயகுமார் உள்ளிட்டோர், தேர் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதி வழியாக சுற்றி வந்த தேர், மாலை, 7:30 மணிக்கு நிலையை
சேர்ந்தது.