/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 பவுன், ரூ.30,000 திருட்டு; தனிப்படை அமைப்பு
/
5 பவுன், ரூ.30,000 திருட்டு; தனிப்படை அமைப்பு
ADDED : அக் 21, 2024 07:27 AM
ப.வேலுார்: பரமத்தி அருகே, நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி, 58; விவசாயி. இவரது மனைவி சரசு, 50; கடந்த, 18 காலை சொந்த வேலையாக பாலுசாமி கரூர் சென்றுள்ளார். அதே பகுதியில், 100 நாள் வேலைக்கு சரசு சென்றுள்ளார். மதியம், 2:00 மணிக்கு பாலுசாமி வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 5 பவுன் நகை, 30,000 ரூபாய் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து ப.வேலுார் டி.எஸ்.பி., முருகேசன் (பொ) உத்தரவுப்படி வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை கைது செய்ய பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் எஸ்.ஐ.,க்கள் மோகன், முருகேசன், செந்தில்குமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

