/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூச்சாட்டு கோலாகலம் 4ல் தெப்பத்தேர் உற்சவம்
/
பூச்சாட்டு கோலாகலம் 4ல் தெப்பத்தேர் உற்சவம்
ADDED : அக் 29, 2025 01:51 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் கோவில் என, 25க்கும் மேற்ப்பட்ட மாரியம்மன் கோவில்களில், நேற்று பூச்சாட்டுதலுடன் பண்டிகை துவங்கியது.
இந்த திருவிழா முன்னிட்டு, ஈரோடு சாலையில் உள்ள தெப்பக்களத்தில் தெப்பத்தேர் உற்சவம் நவ., 4ல் நடக்கிறது. 1971ல் ஏற்பட்ட கடுமையான கோடை காரணமாக, தெப்பக்குளத்தில் தண்ணீர் வற்றியதால், தெப்பத்தேர் திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பின், கடந்த, 2022ல் மீண்டும் தெப்பத்தேர் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. நவ., 5, 6ல் பொங்கல் திருவிழா, 7ல் அம்மன் திருவீதி உலா, 8ல் கம்பங்கள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தெப்பக்குளத்தில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது.

